Cherreads

Chapter 1 - Uravai thedi EP 1

ஐஸ்வர்ய இல்லத்தின் முன்னால் காரின் horn சத்தம் கேட்கிறது.

"ஏய், security அக்காவும் மாமாவும் வராங்க பாரு gate அ திற.." என எழில்வேந்தன் கூறினான்.

மிக பிரமாண்டமான அரண்மனை அது. கார் உள் நுழைந்தது.

வீடு முழுவதும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காரில் இருந்து தேவராஜ் கீழே இறங்கினார்.

அவர், அந்த பங்களாவினை ஆட்சி செய்யும் ராணியின் கணவர்.

மிடுக்கான தோற்றத்தில் சிறிதளவு

குற்றும் மீசையுடன் காணப்பட்டார்.

காரின் மறுமுனையில் இருந்து கார் கதவு திறக்கப்பட்டது.

விலை உயர்ந்த அடுக்கு வைத்த பாதணிகளை அணிந்த , வெண்ணிலவிற்கு கால்கள் முளைத்திருப்பின் அதற்கு கொலுசு போட்டால் எப்படி தென்படுமோ அவ்வாறு காணப்பட்ட அவளது கால்கள் கீழே அடி எடுத்து வைக்கப்பட்டன. சிவப்பு, பச்சை என அணிந்த வளையல்களுடனும்

வைரம் பதித்த மோதிரங்களுடனுமான

கைகள் காரின் கதவினை பிடித்தவாறு

வெளியே வந்தது.

அவள் முகம் பாலில் வார்த்ததோ என்னவோ தெரியவில்லை. தலை முடியை வாரி கொண்டை போட்டிருந்தாள்.

மழை பொழிவதற்கு முன் கரிய மேகங்கள் கரிய வானத்தினை சூழ்ந்து கொண்டது போல் அவளது கண்களின் கீழ் ஓரங்களில் மை பூசியிருந்தாள்.

பூ , பழம் என்பவற்றைக் கொண்ட அர்ச்சனை தட்டினை மறு கையில் ஏந்தியவாறு கீழே இறங்கினாள்.

ஆம் அவள் தான் இந்த அரண்மனையின் எஜமானி...

More Chapters